விடுதியின் மாடியிலிருந்து குதித்து தப்பிய மாணவர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

அகமதாபாத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிட பால்கனியில் இருந்து மாணவர்கள் குதித்து தப்பிய புதிய வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த வாரம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்தவர்கள் மட்டுமின்றி விடுதியிலிருந்த மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் உட்பட 274 பேர் உடல் கருகி பலியாகினர். இந்நிலையில், விமானம் விழுந்து விபத்துக்குள்ளான போது ஏற்பட்ட தீயில் இருந்து தப்பிக்க, விடுதிக் கட்டிடத்தின் பால்கனியில் இருந்து குதித்து மாணவர்கள் உயிர் தப்பிய புதிய வீடியோ வெளியாகியுள்ளது.

Night
Day