அகமதாபாத் - லண்டன் விமானத்தில் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு

எழுத்தின் அளவு: அ+ அ-

அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். 

கடந்த 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உள்பட 274 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அந்த விபத்துக்குப் பிறகு,  அகமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியா 159 விமானம் இன்று மதியம் 1.30 மணியளவில் லண்டன் புறப்படுவதாக இருந்தது. ஆனால், தொழில்நுட்பக் காரணங்களால் இந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளான நிலையில், பயணக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப பிரச்னைக்கு உள்ளாவது, 4வது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Night
Day