விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை - நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு - ஏராளமான வீடுகள் சேதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இமாச்சல் பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் உயிரிழந்தனர். 

வட மாநிலங்களில் தற்போது பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இமாச்சல் பிரதேசம் மண்டி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவரை காணவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள் மண்ணில் புதைந்த நிலையில் காணப்பட்டன. 

நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களிலுள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேக வெடிப்பின் காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Night
Day