வாக்கு திருட்டு குறித்து வீடியோ வெளியிட்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டு 5 வகையான வாக்கு திருட்டில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலிலும், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலிலும் வாக்கு திருட்டு நடைபெற்றதற்கான ஆதாரங்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவைர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டார். இதுதொடர்பாக, தற்போது தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, பாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டு 5 வகையான வாக்கு திருட்டில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக சாடியுள்ளார். 

அதில், நாடளுமன்ற தேர்தலில் போலி வாக்காளர்களாக 11 ஆயிரத்து 965 பேரும், போலி முகவரியில் 40 ஆயிரம் பேரும் சேர்க்கப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும், ஒரே முகவரியில் சுமார் 10 ஆயிரத்து 500 பேர் சேர்க்கப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ள ராகுல் காந்தி, புகைப்படம் இல்லாமல் 4 ஆயிரத்து 132 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் படிவம் 6ஐ தவறாக பயன்படுத்தி 33 ஆயிரத்து 692 பேர் சேர்க்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, சுமார் ஆறு லட்சம் வாக்காளர்களில் ஒரு லட்சம் பேர் போலியானவர்கள் எனவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இவ்வாறு, வாக்கு திருட்டு நடைபெறவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தல் வேறாக இருந்திருக்கும் எனவும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் எனவும் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

Night
Day