சட்டவிரோதமாக இந்திய கடற்பகுதிக்குள் வந்த 2 இலங்கை மீனவர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காரைக்கால் அருகே எல்லை தாண்டி சட்டவிரோதமாக இந்திய கடற்பகுதிக்குள் வந்த இலங்கை மீனவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

கருக்களாச்சேரி கடற்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பைபர் படகு ஒன்று கடற்கரைக்கு வந்தது. அதனை போலீசார் சோதனையிட்டு படகிலிருந்த 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் இருவரும் இலங்கை யாழ்ப்பாணம் அடுத்த பருத்தித்துறையை சேர்ந்த மீனவர்கள் மணிமாறன், மணியரசன் என்பது தெரியவந்தது. இலங்கையை சேர்ந்த கயன் என்பவர் காரைக்கால் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்று அங்கு வரும் நபரிடம் இருந்து பொருளை வாங்கி வந்து கொடுத்தால் தகுந்த ஊதியம் வழங்கப்படும் என கூறியதாக கைதானவர்கள் தெரிவித்தனர். இலங்கையில் இருந்து எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீனவர்கள் காரைக்காலுக்கு வருவதால் இந்திய கடற்பகுதி எல்லையில் பாதுகாப்பை தீவிரபடுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 

Night
Day