வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 370-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - பிரதமர் திட்டவட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து 370 இடங்களில் வெற்றி பெறும் என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபுவாவில் நடைபெற்ற பழங்குடியினர் பேரணியில் பங்கேற்று பேசிய பிரதமர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 370 இடங்களை கைப்பற்ற, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 370 ஓட்டுகள் கூடுதலாக பதிவாதை வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், தான் இங்கு மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு வரவில்லை என்றும், மத்தியப்பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவிக்க ஒரு சேவகனாக வந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். தொடர்ந்து, பழங்குடியினர் சமூகம் என்பது வாக்கு வங்கி அல்ல, அவர்கள் நம் நாட்டின் பெருமை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

varient
Night
Day