ஜிபிஎஸ் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை செயல்படுத்த மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள், எந்த இடத்திற்கு எல்லாம் பயணம் செய்துள்ளது என்பதை வாகன பதிவெண்களை ஸ்கேன் செய்து, ஜிபிஎஸ் மூலமாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். இதன்மூலம், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணித்த தூரத்துக்கு மட்டும் வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்த முடியும். இதனால், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பது மற்றும் அதனால் ஏற்படும் நெரிசல்களை தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறை வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Night
Day