அயோத்தி : ராமர் கோயிலுக்கு செல்லும் அரவிந்த் கெஜ்ரிவால்

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை குடும்பத்துடன் அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த மாதம் ராமர் கோயில் வெகு விமரிசையாக திறக்கப்பட்டதையடுத்து, நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முறையான அழைப்பு வரவில்லை என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே தெரிவித்த நிலையில், நாளை குடும்பத்துடன் ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். அவருடன் பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மானும் சாமி தரிசனம் செய்ய உள்ளார். 

Night
Day