உத்தரகாண்ட் கலவரம் - மூளையாக செயல்பட்டவர் டெல்லியில் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் நடைபெற்ற வன்முறைக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் மாலிக் என்பவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். ஹல்த்வானி மல்லீக் தோட்டம் பகுதியில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்த இஸ்லாமிய பாடசாலையை, சில தினங்களுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் இடிக்க முயன்றபோது வன்முறை வெடித்தது. இதில் தொடர்புடைய கலவரக்காரர்கள் பலரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்திருந்தனர். மேலும், வன்முறைக்கு காரணம் என குற்றம்சாட்டி அப்துல் மாலிக் என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில், டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள அப்துல் மாலிக், தேசிய பாதுகாப்பு முகமை விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Night
Day