மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்வதால் விலை உச்சத்தை எட்டுகிறது - ஜெயந்தி லால்

எழுத்தின் அளவு: அ+ அ-

வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு லட்சத்தை கடந்துள்ளது. மலைக்க வைக்கும் இந்த விலை உயர்வால் ஏழை மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகவே மாறியுள்ளது.

2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஏற்றம் கண்டு வந்து தங்கம் விலை, ஆண்டின் இறுதியை நெருங்கும் நிலையில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை காலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் 440 ரூபாய் அதிகரித்தது. இதன் மூலம் ஒரேநாளில் சவரனுக்கு ஆயிரத்து 160 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 120 ரூபாய்க்கும், கிராமுக்கு 145 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 515 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  

தங்கத்திற்கு நிகராக வெள்ளி விலையும் வேகமாக உயர்ந்து வருகிறது. காலை நிலவரப்படி வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் 2 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 215 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 5 ஆயிரம் அதிகரித்து 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரு லட்சம் ரூபாயை கடந்துள்ளது நடுத்தர மற்றும் ஏழை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலையால் ஏழை மக்களுக்கு இனிமேல் தங்கம் எட்டாக்கனியாகிவிட்ட நிலையில், நகை சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால் அது ஏழைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நகை வியாரிகள் தெரித்துள்ளனர்.


Night
Day