கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 16வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 16வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனை செய்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று மீண்டும் இமெயில் மூலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற தடுப்புப்பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் துறை அலுவலகங்கள், கூட்டரங்குகள், உணவு அருந்தும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Night
Day