முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

தமிழக, கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய நீர் பாசனமாகவும் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த முல்லைப் பெரியாறு அணையை கிரிதர் தலைமையிலான துணை கண்காணிப்பு குழு மாதந்தோறும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வர். அந்த வகையில், இன்றும் பேபி அணை, மெயின், மதகுப்பகுதி, நீர்க்கசிவு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். பின்னர் இருமாநில அதிகாரிகளும் ஆலோசித்து அதன் அறிக்கையினை மத்திய குழுவினரிடம் ஒப்படைப்பர்.

Night
Day