தன்னை துரோகி என அன்புமணி பேசுவது வருத்தம் - ஜி.கே.மணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாமக நிறுவனர் ராமதாசும், அன்புமணியும் ஒன்று சேர்வதற்காக, கட்சியில் இருந்தும் விலகத் தயார் என்று அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
 
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‎பாமகவுக்கு தற்போது நிலவும் சோதனைக்கு ஜிகே மணியாலோ அல்லது பாட்டாளி மக்கள் கட்சிக்காக பாடுபட்டவர்களாலோ இல்லை என்று கூறினார். அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியதே தாம் தான் என்று கூறிய ஜி.கே. மணி, தன்னை துரோகி என்று அவர் கூறுவது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார். ராமதாசும், அன்புமணியும் சேர்ந்து பேசினால்தான் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்றும் துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் இணையமாட்டேன் என்று கூறும் அன்புமணி, துரோகிகள் யார் என்று கூறினால் கட்சியில் இருந்து வெளியேறத் தயார் என்றும் ஜிகே மணி தெரிவித்தார்.

Night
Day