பாலியல் குற்றவாளி ஞானசேகரன் மீதான குண்டாஸ் ரத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஞானசேகரரின் தாயார் கங்காதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

Night
Day