மூதாட்டியை கொலை செய்து கவரிங் நகை கொள்ளை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நொளம்பூரில் தங்கம் என்று நினைத்து கவரிங் நகை அணிந்திருந்த மூதாட்டியை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நொளம்பூர் பகுதியில் தனியாக வசித்து வந்தவர் 70 வயதான மேரி. அவருடைய வீட்டில் இருந்து நேற்று இரவு பலத்த சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது மூதாட்டி சுயநினைவின்றி கிடந்த நிலையில், அருகில் ஒருவர் இருந்துள்ளார். தப்பியோட முயன்ற அந்த நபரை மக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த 65 வயதான காராமணி என்கிற ஏழுமலை என்பதும் அவரது பாக்கெட்டில் மூதாட்டியின் இரண்டு கம்மல்கள் மற்றும் செயின் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரை கைது செய்த நிலையில், மூதாட்டியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் முக்கிய திருப்பமாக மூதாட்டி மேரியை கொலை செய்து கொள்ளையடிக்கப்பட்டது கவரிங் நகைகள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Night
Day