லாரி ஏறியதில் சிறுவன் பரிதாபமாக பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலத்தில் லாரி ஏறியதில் ஒன்றாம் வகுப்பு மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்ச்சல் மாவட்டம் துண்டிகல் நகரில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் ஒன்றாம் வகுப்பு மாணவர் ஒருவர் தாயுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். மல்லம்பேட் பகுதியில் இருசக்கர வாகனம் வந்தபோது அவ்வழியாகச் சென்ற லாரி உரசியதில் மாணவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, மாணவர் மீது லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Night
Day