சாதிய அடையாளங்களின்றி தேர் திருவிழா நடத்த உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் ஆனி தேர் திருவிழாவை சாதிய அடையாளங்கள் இல்லாமல் அமைதியான முறையில் நடத்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்ரதரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவில், ஆனி திருவிழா வரும் 8ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சாதி ரீதியான விஷயங்கள் தற்போது ஆட்கொண்டிருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை களைய, சாதி ரீதியான படமோ, பெயரோ, கொடியோ காண்பிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை மற்றும் இந்துசமய அறநிலையத்துறை இணைத்து அமைதியான முறையில் திருவிழாவை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். 

Night
Day