சென்னை ஐஐடி-யில் மாணவிக்கு பாலியல் தொல்லை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா பல்கலைக் கழக பாலியல் சம்பவத்திற்கு பிறகும் கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை ஐஐடியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் விடுதியில் இருந்து வெளியே வந்து நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, கையில் கட்டையுடன் வந்த வடமாநில இளைஞர் மாணவியின் முடியை பிடித்து இழுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அங்கிருந்து தப்பித்து காவலாளிகளிடம் தகவலை தெரிவித்துள்ளார். இதனை கண்ட வடமாநில இளைஞர் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் ரோஷன் குமார் என்பதும், இவர் ஐஐடி வளாகத்தில் உள்ள Food Court ல் "Mumbai Chaat" என்ற கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து,  உடல்நிலை சரியில்லை என விடுப்பு எடுத்திருந்த அவர், ஐஐடி வளாகத்தில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் உறுதியானது. இதனையடுத்து, ரோஷன் குமாரை போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த பின்பும் கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தாமல் விளம்பர திமுக அரசு அலட்சியம் காட்டியதே இதுபோன்ற சம்பவங்கள் தொடர காரணம் என மாணவ, மாணவிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Night
Day