ராமர் கோவில் கட்டியதில் பிரதமர் மோடிக்கு எவ்விதப் பங்கும் இல்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அயோத்தியில் ராமர் கோயிலை அவர்தான் கட்டியது போல பிரதமர் மோடி காட்டிக் கொள்வதாகவும் உண்மையில் இதில் மோடியின் பங்கு ஜீரோதான் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் தனது வாராணசி தொகுதியிலும், ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் கோயில் கட்டுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பாஜகவில் இருந்து கொண்டே சுப்பிரமணிய சுவாமி இதுபோன்ற பரபரப்புக் கருத்துகளை தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Night
Day