ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து - 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு வங்கத்திலிருந்து சிக்கிம் நோக்கி சென்ற ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 


மேற்கு வங்கத்தில் உள்ள என்ரூட் மிஷன் கமாண்ட் குழுவைச் சேர்ந்த சில வீரர்கள், பெடோங்கில் இருந்து சுலுக் நோக்கி  வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகனம் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள சில்க் வழியாக சென்று கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த சுபேதார் கே.தங்கபாண்டி உட்பட 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

varient
Night
Day