ராஜினாமா செய்தார் பிரதமர் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

7 கட்டங்களாக நடைபெற்ற 18-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளிலும், காங்கிரசின் இந்தியா கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இதில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியுள்ளதால் 3-வது முறையாக பாஜக அரசு ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் பதவிக்காலம் வரும் 16ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், புதிதாக அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் இடம் பெற உள்ளவர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனைத்தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த நரேந்திர மோடி தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். மேலும் வரும் 8-ம் தேதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடி, அதுவரை காபந்து பிரதமராக நீடிப்பதற்கான கடிதத்தையும் குடியரசுத் தலைவரிடம் வழங்கினார். மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக குடியரசு தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் மோடி கோரிய காபந்து பிரதமருக்கான கடிதத்தையும் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day