புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் 2026-ல் வென்று காட்டுவோம் - தொண்டர்கள் சூளுரை

எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, 'கழகத்தை தலைமையேற்று வழிநடத்திட வாருங்கள்' என அழைப்பு விடுத்து, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

அஇஅதிமுக பிளவுபட்டு உள்ளதால், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான தொண்டர்கள், கழகத்தை தொடர் தோல்விலியிருந்து காப்பாற்றவும், கழகத்தை வழிநடத்தவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வரவேண்டுமென அழைப்பு விடுத்து வருகின்றனர். 

தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில், கழகத்தை காக்க சிங்கப் பெண்ணாக வாருங்கள் என புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு அழைப்புவிடுத்து கழக வழக்கறிஞர் பூசத்துரை பாண்டியன் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'கழகத்தை காக்க வாருங்கள், புரட்சித்தாய் சின்னம்மா' என தென்காசி மாவட்டம் முழுவதும் கழக நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். 

இதேபோல், சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு முக்கிய இடங்களில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கழகத்தை வழிநடத்திட வரவேண்டுமென சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கழக நிர்வாகி எஸ்.கே.செங்கோட்டு வேலவன் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில், 'சிந்திப்போம், செயல்படுவோம், சின்னம்மா தலைமையை ஏற்போம்' என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. புரட்சித்தலைவி அம்மா உருவாக்கிய கழகத்தை காப்பாற்ற, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

வில்லிவாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் ஒட்டியுள்ள சுவரொட்டியில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் லட்சிய முழக்கத்தை நிறைவேற்ற வேண்டிய அனைவரும் பிரிந்து கிடப்பதா? என்றும், கோபதாபங்களை மறந்து, கருத்து வேறுபாடுகளை களைந்து, இயக்கத்தை காப்பதே லட்சியம் என ஒன்று பட வேண்டிய தருணம் இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பிரிந்திருக்‍கும் தொண்டர்கள் அனைவரும், புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஓரணியாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக மகாகவி பாரதியாரின் வரிகளை மேற்கொள்காட்டி ஜேசிடி பிரபாகர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேபோல், சென்னை மாநகர் முழுவதும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. திரு.வி.க. நகர் 75வது கிழக்கு வட்ட கழக நிர்வாகி M.K.P.ரமேஷ் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்று சேர்ந்து, 2026ல் வென்று காட்டுவோம் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

Night
Day