பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் பிரியங்கா காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் வயநாட்டில் நிலம்பூர் வனப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களை காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். வயநாடு மக்களை தொகுதி எம்.பி.யான அவர், தொகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக கொட்டியம் வயல் வனப் பகுதிக்குள் நடைபெற்றுவரும் சாலை திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அலுவலருடன் இணைந்து  பிரியங்கா காந்தி நேற்று பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து நிலம்பூர் அருகே கருளை காடு வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை நேரில் சந்தித்த பிரியங்கா காந்தி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். 

Night
Day