நேபாள இடைக்கால பிரதமருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நேபாளத்தில் மீண்டும் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று இடைக்கால பிரதமர் சுசீலா கார்க்கியிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். 

நேபாள இடைக்கால பிரதமர் சுசீலா கார்க்கியிடம் இன்று தொலைபேசியில் பிரதமர் மோடி உரையாடினார். இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த உரையாடலின் போது அண்மையில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்ததாக கூறியுள்ளார். நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவு உறுதிப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, நாளை தேசிய தினத்தை கொண்டாடும் நேபாள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் பதிவிட்டுள்ளார். 

Night
Day