முதுநிலை பல் மருத்துவ நீட் தேர்வு தேதி அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முதுநிலை பல் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு மார்ச் 18ம் தேதி நடைபெறும் என 
மருத்துவ அறிவியலுக்‍கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

இளநிலை மருத்துவம், பல் மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களுக்‍கு நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான தேர்வு வரும் மார்ச் மாதம் 18-ந்தேதி நடைபெறும் என மருத்துவ அறிவியலுக்‍கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க பிப்ரவரி 19ம் தேதி பகல் 11.55 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 18ம் தேதி வெளியாகும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 

Night
Day