மத்திய பிரதேசம்: மணப்பெண் தேவை - ஆட்டோவில் பேனர் வைத்த இளைஞர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் ஆட்டோவில் மணப்பெண் தேவை என்ற வாசகத்துடன் வைத்துள்ள பேனர் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த தீபேந்திர ரத்தோர் என்பவர் தனக்கு மணப்பெண் தேடுதற்காக நூதன யுக்தி ஒன்றை கையாண்டுள்ளார். புகைப்படத்துடன் கூடிய ப்யோ டேட்டாவை பேனரில் அச்சிட்டு, தனது ஆட்டோ ரிக்‌ஷாவில் விளம்பர பதாகை போல கட்டிவைத்துள்ளார். தற்போது, அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த, புகைப்படத்தில் அவரது பிறந்த வருடத்தை கண்ட நெட்டிசன்கள் நைன்டீஸ் கிட் என்பதை அவர் நிரூபித்துவிட்டார் என்று நகைச்சுவையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். 

varient
Night
Day