தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சையாக பதிவிட்டது தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த 2018ம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டார். இதுதொடர்பாக தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த, வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நீதிபதி ஜி.ஜெயவேல் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தும் உத்தரவிட்டார்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...