மத்திய பட்ஜெட் - பிரதமர் மோடி ஆலோசனை

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் நிதி ஆயோக்கில் இடம்பெற்றுள்ள பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

2024 - 25ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் வரும் ஜூலை 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் நிதி அயோக் குழுவில் இடம் பெற்றுள்ள பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் திட்டங்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார் என கூறப்படுகிறது. ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

varient
Night
Day