மணிப்பூரில் இரு கிளர்ச்சிக் குழுக்கள் இடையே துப்பாக்கிச் சண்டை - இருவர் காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மணிப்பூரில் நேற்று புதிதாக வெடித்த மோதலில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயமடைந்தனர். தெங்னௌபால் மாவட்டம் பெலியாங் கிராமத்தில் இரண்டு கிளர்ச்சிக் குழுக்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், மணிப்பூர் காவல்துறை கமாண்டோக்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளின் ஒருங்கிணைந்த பிரிவு நிலைமையைக் கட்டுப்படுத்தவும் அமைதியைக் கொண்டுவரவும் அப்பகுதிக்கு விரைந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது. மற்றொரு சம்பவத்தில், பல்லேல் அருகே உள்ள மரம் அறுக்கும் ஆலைக்கு சிலர் தீ வைத்தனர். அவர்களில் மூவர் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை கைப்பற்றினர். நேற்றைய சம்பவங்களைத் தொடர்ந்து, காக்சிங் மற்றும் தெங்னௌபால் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

Night
Day