போர் நிறுத்தத்தால் இந்திய பங்குச்சந்தை உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேல்- ஈரான் போர் நிறுத்தம் காரணமாக பங்குச் சந்தைகளில் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்ததை அடுத்து, வாரத்தின் முதல் நாளான நேற்று பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன. இந்நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்ததை அடுத்து, பங்குச் சந்தைகள் இன்று காலை ஏற்றத்துடன் துவங்கின. மதியம் 12 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் எண் சென்செக்ஸ் ஆயிரத்து 45 புள்ளிகள் உயர்ந்து 82 ஆயிரத்து 942 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 317 புள்ளிகள் உயர்ந்து 25 ஆயிரத்து 293 புள்ளிகளாக இருந்தது. மேலும், ஈரான் - இஸ்ரேல் இடையேயான போரின் காரணமாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலையும் மீண்டும் சரியத் துவங்கியுள்ளது.

Night
Day