போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு அரசு எந்த கருணையும் காட்டாது - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு அரசு எந்த கருணையும் காட்டாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், போதைப்பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்குவதற்கான மோடி அரசின் பயணத்தை துரிதப்படுத்தும் வகையில், 88 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் மாத்திரைகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் இம்பால் மற்றும் கவுகாத்தி பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் தொடரும் என்றும் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.

varient
Night
Day