பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு : முசமில் ஷரீப் என்பவர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 
முக்‍கிய குற்றவாளி ஒருவரை கைது செய்ததாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் முஸம்மில் ஷரீப் ​என்பவர் முக்‍கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். ராமேஸ்வரம் கபேயில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மற்ற இரு குற்றவாளிகளுக்‍கு தேவையான போக்‍குவரத்து ரீதியான உதவியை இவர் செய்து கொடுத்ததாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

மார்ச் 1ஆம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் மிக முக்‍கிய குற்றவாளிகளான முஸாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மாத்தேன் தாஹா ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களை தேடிவருவதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. 

varient
Night
Day