புதுச்சேரியில் இரு வேறு இடங்களில் ரூ.4 கோடிக்கு மேல் பணம் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நாளை நடைபெற உள்ளது. இதனிடையே பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரெட்டியார்பாளையம் பகுதி ஜான்சி நகரில் உள்ள நிதி நிறுவன அதிபர் முருகேசன் என்பவரின் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் வீட்டில் சோதனை செய்து கட்டுக்கட்டாக சுமார் 10 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல்  செய்தனர். இதேபோன்று அவருக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் இடங்களில்  நடத்தப்பட்ட சோதனையில் 3 கோடியே 68 லட்ச ரூபாய் மதிப்பிலான பணத்தை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் குலோந்துங்கன், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை 4 கோடியே 9 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Night
Day