பீகார் சட்டபேரவைக்கான தேர்தல் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் - இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. 
 
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தொடர்ந்து பேசிய அவர், பீகார் சட்டப்பேரவையில் உள்ள 121 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்றும், மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு  இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்தார். 

இதை தொடர்ந்து, பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 10 ஆம் தேதி தொடங்கும் என்றும், வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய அக்டோபர் 17 கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் பரிசீலனை அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறும், என்றும் வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 20 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 121 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6ஆம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 13 ஆம் தேதி தொடங்கும் என்றும், வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய அக்டோபர் 20 கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் பரிசீலனை அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும், என்றும் வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 23 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 122 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11ஆம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Night
Day