கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு உ.பி. அரசும் தடை - துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குழந்தைகள் பலியான சம்பவத்தை தொடர்ந்து கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு உத்தரப் பிரதேச அரசும் தடை விதித்துள்ளது. 

இதுதொடர்பாக லக்னோவில் இன்று பேட்டியளித்த மாநில துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக், இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிப்பதாக கூறினார். உத்தரப் பிரதேச அரசு இந்த இருமல் மருந்தை ஒருபோதும் வாங்கியதில்லை என்று தெரிவித்த அவர், இதுபோன்ற இருமல் மருந்தை வாங்க வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக கூறினார். கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரஜேஷ் பதக் தெரிவித்தார். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்கள் கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day