'மாதம்பட்டி ரங்கராஜை விமர்சிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை இல்லை'

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் தன் மீது அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இரு வாதங்களை கேட்ட நீதிபதி, இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்றார். மனுவுக்கு வரும் 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

Night
Day