ரூ.89 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 1,400 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை தொட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11 ஆயிரத்து 60 ரூபாய்க்கும், சவரன் 880 ரூபாய் உயர்ந்து சவரன் 88 ஆயிரத்து 480 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்நிலையில், பிற்பகல் மீண்டும் தங்கம் ஒரு கிராம் 65 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 125 ரூபாய்க்கும், சவரன் 520 ரூபாய் உயர்ந்து சவரன் 89 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

காலையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்த நிலையில் பிற்பகல் கூடுதலாக ஒரு ரூபாய் அதிகரித்தது. இதன்மூலம் வெள்ளி கிராம் 2 ரூபாய் உயர்ந்து 167 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Night
Day