பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் பதில் மனு தாக்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய தேர்தல் ஆணையம் கேட்கும் 11 ஆவணங்களை வாங்குவதற்கு ஆதார் தேவைப்படும் போது, ஏன் ஆதார் அடையாள அட்டையை ஆவணமாக இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை என ஜனநாயக சீர்திருத்த சங்கம் உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்த இந்திய தேர்தல் ஆணையம், ஆதார், வாக்காளர் மற்றும் குடும்ப அட்டைகள் நம்பகமான ஆவணங்கள் அல்ல என தெரிவித்திருந்தது. இந்திய தேர்தல் ஆணையம் கேட்கும் 11 ஆவணங்களில் நிரந்தர குடியிருப்பு ஆவணம், பாஸ்போர்ட், ஓபிசி-எஸ்சி-எஸ்டி உள்ளிட்ட ஆவணங்களை பெறுவதற்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பயன்படுத்தப்படும் நிலையில், வாக்காளர் தீவிர திருத்த நடவடிக்கைகளில் மட்டும் ஏன் வாக்காளர் அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணையம் சேர்த்துக் கொள்ளவில்லை என ஜனநாயக சீர்திருத்த சங்கம் விளக்க மனுவை தாக்கல் செய்துள்ளது.

Night
Day