பிரதமர் மோடியை நேரில் சென்று வரவேற்றார் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாலத்தீவு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் முப்படை அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

4 நாட்கள் பயணமாக இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார் பிரதமர் மோடி. கடந்த 23ம் தேதி இங்கிலாந்துக்கு சென்ற அவர், 2 நாள் பயணத்தை நிறைவு செய்து தனி விமானம் மூலம் மாலத்தீவுக்கு சென்றார். மாலத்தீவு தலைநகர் மாலே விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு நேரில் வரவேற்றார். பின்னர், அந்நாட்டின் முப்படை அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, பெண்கள் சிறுவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாரம்பரிய இசையை இசைத்தபடி, நடனமாடி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்வின் போது, மாலத்தீவு வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்று பிரதமர் மோடியை வரவேற்றனர்.

தொடர்ந்து, அந்நாட்டின் சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, இன்று மாலையே இந்தியாவிற்கு திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பாரம்பரிய நடனமாடி வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியை பிரதமர் மோடி கைதட்டி உற்சாகமாக கண்டு ரசித்தார்.

Night
Day