எழுத்தின் அளவு: அ+ அ- அ
நீலகிரி, தேனி மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில், மேற்குவங்கம்- வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி இன்று நகர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
நீலகிரி, தேனி மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,
நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, நெல்லை ஆகிய 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.