எழுத்தின் அளவு: அ+ அ- அ
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடி முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி சார்பில் போட்டியிட மகாராஷ்டிரா ஆளுநரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெபி நட்டா, நிதின் கட்கரி ஆகியோர் முன்னிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் நரேந்திர மோடி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.