பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கட்டுப்பாட்டை இந்தியா திரும்பப் பெறும் - ராஜ்நாத் சிங்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கட்டுப்பாட்டை இந்தியா திரும்பப் பெறும் எனவும், பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டால் தகுந்த பதிலடி தரப்படும் எனவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

2 நாள் அரசு முறை பயணமாக மொராக்கோ சென்றுள்ள ராஜ்நாத் சிங், ரபாத்தில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் வலியுறுத்தியதாலேயே போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், பிரதமரும் ஆப்பரேஷன் சிந்தூர் ஒரு இடைநிறுத்தம் என்றே கூறி உள்ளதாகவும் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் 2, ஆபரேஷன் சிந்தூர் 3 எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் எனவும், பாகிஸ்தானின் நடவடிக்கையை பொறுத்து செயல்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Night
Day