மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவி கீதா ராதா உடலுக்கு, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகைகள் ராதிகா சரத்குமார், நிரோஷாவின் தாயாருமான கீதா ராதாவின் உடலுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகைகள் ராதிகா சரத்குமார், நிரோஷாவின் தாயாருமான கீதா ராதா, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கீதா ராதாவின் உடலுக்கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, மகளான நடிகை ராதிகா, மருமகனான நடிகர் சரத்குமார் ஆகியோரை சந்தித்து புரட்சித்தாய் சின்னம்மா ஆறுதல் கூறினார்.



Night
Day