மேயர் பிரியாவின் சொந்த வார்டில் ஆறுபோல் ஓடும் கழிவுநீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மேயர் பிரியாவின் சொந்த வார்டில் சாலையில் ஆறு போல் ஓடும் கழிவு நீரால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

திரு வி.க. நகர் தொகுதிக்குட்பட்ட 74வது வார்டின் கவுன்சிலராக மாநகராட்சி மேயர் பிரியா உள்ளார். இந்த வார்டில் உள்ள ஏகாங்கிபுரத்தில் கடந்த பத்து நாட்களாக கழிவு நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் பாய்ந்து செல்கிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், சாலையை கடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டியுள்ளனர். 

Night
Day