பஹல்காம் பயங்கரவாதிகள் குறித்த விவரங்கள் சேகரிப்பு - என்ஐஏ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட 2 பேரும் பயங்கரவாதிகளின் அடையாளங்கள் குறித்த விவரங்களை தெரிவித்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 22ம் தேதி கைது செய்யப்பட்ட 2 பேருக்கும் ஜம்மு தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கியுள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையின் போது, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று ஆயுதமேந்திய பயங்கரவாதிகளின் அடையாளங்கள் குறித்த விவரங்களை இருவரும் தெரிவித்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் குறித்து போதுமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, அவை கவனமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும், பயங்கரவாதிகளின் அடையாளங்கள் மற்றும் விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Night
Day