பஹல்காம் தாக்குதல்... பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்வாரா என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 
   
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பிரியங்கா காந்தி, பஹல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியை காட்டுவதாகவும், பஹல்காம் தாக்குதல் சம்பவம் நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய வலியை தந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். பெஹல்காமில் ஒரு மணி நேரம் தாக்குதல் நடத்தப்பட்ட போது, அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் செல்லாதது ஏன் என்றும், 2021ஆம் ஆண்டுக்கு பின் 25 முறை தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதற்கு யார் பொறுப்பு எனவும் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசும் மத்திய அரசு, பாதுகாப்பு குறைபாடு குறித்து பேச மறுப்பது ஏன் என்றும் வினவினார். மேலும், இந்தியா பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் குறித்து டிரம்ப் அறிவித்ததை சுட்டிக்காட்டிய பிரியங்கா காந்தி, சண்டை நிறுத்தம் குறித்து மத்திய அரசு பேச மறுப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

வெற்றியை கணக்கில் கொள்ளும் பிரதமர் பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்காதது ஏன்? என்றும், பெஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், உளவுத்துறை தலைவரும் பதவியை ராஜினாமா செய்வார்களா எனவும் வினவினார். 

Night
Day