அரசு பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் அரசுப்பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, காலாண்டு தேர்வு செப்டம்பர் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. மேலும், செப்டம்பர் 27ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று  டிசம்பர் 15ம் முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என்றும் டிசம்பர் 24ம் தேதி அரையாண்டும் விடுமுறை தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியான நிலையில் பொதுத்தேர்வுக்கான அட்டவணை வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெவித்துள்ளது.

Night
Day