தந்தை பெரியாரின் கொள்கைகளை நினைவில் கொள்வோம் - புரட்சித்தாய் சின்னம்மா அறிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளில் அவரது கொள்கைகளை நாம் அனைவரும் நினைவில் கொள்வோம் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தத்திற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடிய தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாளில் அவர்தம் கொள்கைகளை நாம் அனைவரும் நினைவில் கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சுயமரியாதையும், தன்மானமும் உயிருக்கு சமம் என்றார் - ஆணும் பெண்ணும் சமம் என்று பெண்ணுரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் - ஜாதி, மத, பேதமற்ற சமுதாயம் அமைந்திட தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை தவிர்த்து மற்ற அவரது அனைத்து கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எங்களது தலைவர்களான பேரறிஞர் அண்ணா, பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர்களது அதே வழியில் நாமும் தொடர்ந்து பின்பற்றிட இந்நாளில் உறுதி ஏற்போம் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

varient
Night
Day