மழையால் சாலையில் மரம் விழுந்து உயர் மின்னழுத்த கம்பிகள் சேதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதியில் பெய்து வரும் மழையால் சாலையில் மரம் விழுந்து உயர் அழுத்த மின்கம்பிகள் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாண்டிக்குடி மலை கிராமத்தில் பிரதான சாலையில் மரம் ஒன்று அருகில் இருந்த உயர் அழுத்த மின்கம்பத்தின் மீது விழுந்ததில் மின்கம்பம் மற்றும் மின் கம்பிகள் அறுந்து சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் தற்காலிகமாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. மின்கம்பிகள், மரங்கள் சாலையில் கிடப்பதால் மலை கிராமத்தில் இருந்து செல்லக்கூடிய அரசுப் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.

Night
Day