பணி மாறுதல் செய்யப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி - பணி மாறுதல் செய்யப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி - நெகிழ்ச்சியான பிரியாவிடை அளித்த சக ஊழியர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்தியப்பிரதேசத்தில், பணி மாறுதல் செய்யப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரியை சக ஊழியர்கள், பல்லக்கில் சுமந்து சென்று பிரியாவிடை அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2015 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சன்ஸ்கிருதி ஜெயின், சியோனி மாவட்ட ஆட்சியராக கடந்த ஓராண்டாக பணிபுரிந்தார். அவர் தற்போது போபால் நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பாக பணியாற்றியதால் மக்கள் அன்பையும், நம்பிக்கையையும் பெற்ற சன்ஸ்கிருதி ஜெயினுக்கு  ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் நேற்று பிரியாவிடை கொடுத்தனர். அன்னப்பறவை வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்த பல்லக்கை ஏற்பாடு செய்து, அதில் சன்ஸ்கிருதியையும், அவரது இரு மகள்களையும் அமர வைத்து, ஊழியர்கள் சிறிது துாரம் வரை சுமந்து சென்று தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இந்த, வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

Night
Day